ABOUT US

DIVYA PRABANDHAM

பெரும் பெயர் கோவிந்தா! சிறு பெயர் நாராயணா!


Mannargudi Rajagopalan


அன்பு என்னும் அகலில், ஆர்வம் என்னும் நெய்யை சேர்த்து,  இன்புறுகு சிந்தை திரியாக இட்டு, ஞானச் சுடர் விளக்கை ஏற்றிய பூதத்தாழ்வார், பரஞானம் என்ற பரபக்தியின் அடுத்த நிலையில் நுழைந்து எம்பெருமானை தரிசித்து அவனிடத்தில் அளவுகடந்த அன்பை அனுபவித்திருக்கிறார்.

'அன்பு' என்ற சொல்லில் ஆரம்பித்து 'அன்பு' என்ற சொல்லிலேயே நிறைவடையும் இரண்டாம் திருவந்தாதி பிரபந்தத்தில், அவர் திரிவிக்ரமன் மற்றும் கிருஷ்ணரின் சௌலப்ய சௌசீல்ய குணங்களை விரிவாகக் கையாண்டுள்ளார்.

திருக்கோளூர் உலகளந்த பெருமாளின் மற்ற பெயர்களான ஆயனார், கோவலன், கோபநகரீஷன் என்னும் நாமங்கள் கூட கண்ணன் பற்றியதே! திருக்கோவலூருமே கோபபுரி அல்லது கோபநகரி என்றெல்லாம்  அழைக்கப்படுகிறது.

எம்பெருமானின் பராக்ரமத்தை பலவாறு பேசிய ஆழ்வார், கடைசியாக 100வது பாசுரத்தில் கூட கண்ணனையே நினைத்துக் கொண்டு,’ விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே, கண்ணனே!’ என்று தலைக்கட்டுகிறார்.

பெருமானின் பெருமை பல பேசிய ஆழ்வாரின் மனதில் ஒரு அவா! இதில் மத்யமான 50 ஆவது பாசுரத்தில் ஆழ்வார், பெருமாளை ஆயர்பாடியில் அறியாத கோபியர்கள் அழைத்த எளிதில் புரியும் பெயர்களான ஆயவன், மாயவன், யாதவன் என்றெல்லாம் அழைக்க விரும்புவதாக கூறுகிறார்.  கண்ணனின்  தூய அன்பும், எளிமையும் சொல்லும் இப்பெயர்களே கண்ணனுக்கு பிடித்தவை என்றும்,  இவைதான் உண்மையில் பெரும்பெயர் என்றும் ஆழ்வார் அருளிச்செய்கிறார். 

அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன,
பிழைப்பில் பெரும்பெயரே பேசி, - இழைப்பரிய
ஆயவனே. யாதவனே. என்றவனை யார்முகப்பும்,
மாயவனே என்று மதித்து.

 நாராயணன்,  பரமபுருஷன்,  போன்ற பெயர்கள் பெருமாளின் பரத்வ குணங்களைப் பற்றி நன்றாகவே பேசும். ஆனால் இப்பெயர்களின் அர்த்தத்தை முழுதாக புரிந்துகொள்வது என்பது மிகவும் கடினம். எனவே இப்பெயர்கள் சிறு பெயர்கள் என ஆழ்வார் கருதினார் போலும்!!

கோதையும் திருப்பாவையின்  முதலில் நாராயண, பத்மநாபா..... போன்ற பெயர்களால் கிருஷ்ணனை அழைத்துவிட்டு, கடைசியில் ' கறவைகள் பின்சென்று பாசுரத்தில் -  'குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா, உன்னைச் சிறு பேர் அழைத்தனவும், சீறி அருளாதே' என்று கூறி கிருஷ்ணரிடம் சரணடைந்தாள்.

வாருங்கள்!, நாமும் அந்தக்குட்டி கிருஷ்ணன் உள்ளம் உவந்த ஆயர்பாடி மற்றும் பிருந்தாவனத்தில் அனைவரும் அழைத்த இனிய பெரும் பெயர்கள் கொண்டு அழைத்து அந்தக் கண்ணனை மகிழ்விப்போம்.

பாலகோபால!

பாலமுகுந்த!

பக்தவத்ஸல!

பான்கேபிஹாரி!

பன்கிம்!

பான்வரி!

ப்ரிஜெஷ்! (வ்ரஜெஷ்)!

வ்ரஜவர!

கிருஷ்ண!

கோபால! கிருஷ்ண!

கணஷ்யாம!

கிரிதாரி!

கோபால!

கோபி!

கோவிந்தா!

கோபபால!

கோபிகாநாத!

கோபிகேஷ!

ராதிகாநாத!

ராதாகிருஷ்ணா!

குஞ்ஜவிஹாரி!

யசோதா நந்தன!

வ்ரஜகுல நந்தன!

நந்தகுமார!

கண்ணன்!

கோரஸ-சோர!

கன்ஹையா!

கான்ஹா!

மாகன்சோர்!

முகுந்தா!

முரளிதரா!

மயூர!

கிஷன்!

கிஷோர்!

மாதவ!

கேசவ!

மன்மோஹன!

நந்தகிஷோர!

நவநீத சோர!

ச்யாம!

ச்யாமஸுந்தர!

கோபேஷ!

கோபிஜன வல்லப!

யாதவ!

மேகச்யாம!

முராரி!

தாமோதர!

வனமாலீ!  ...................

ஆழ்வார் திருவடிகளே சரணம்!

அடியேன், 

 ----திருமதி மாலதி பாலாஜி


No comments:

Post a Comment