ABOUT US

DIVYA PRABANDHAM

மனத்துக்கினியான் !




"மனத்துக்கினியான்" என்ற திருப்பாவை வாக்கியம்  'ராம' சப்தம் ஆகும்.

ஸம்ஸ்க்ருதத்தில் ராமன் என்ற ஶப்தத்திர்க்கு "ரமயதி இதி ராம" - "மயக்குபவன் ராமன்" என்று விரிவாக்கம்.- அதனால் மனத்துக்கினியன்.

Mind voice  -"கிருஷ்ணன் தானே மனத்துக்கினியான்?

அவன் கண்ணுக்கினியான் - அவன் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், யசோதை இளம் சிங்கம், கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் அல்லவோ!

"ராமன் கௌசல்யா நந்தவர்தன:" - தாயாரின் சந்தோஷத்தை அதிகரிக்கிறவன்  - அதனால் மனத்துக்கினியான்!

"தசரதாத்மஜ ராம:" - தசரதரின் ஆத்மார்த்தமான  புத்திரன் - அதனால் மனத்துக்கினியான்!

"குணவான்" - அனந்தகல்யாண குணங்கள் உடையவன் -  அதனால் மனத்துக்கினியான் !

"தர்மஞ:" - தர்மத்தின் பாதையில் நடப்பவன்- அதனால் மனத்துக்கினியான்!

"ஸர்வபூதேஷு ஹித:" - எல்லோருக்கும் உபாயம் - அதனால் மனத்துக்கினியான்!

"ராம சரித்திரம் பவித்ரம், பாபக்னம், புண்யம் - ராமனின் கதையை சொன்னாலும் கேட்டாலும் மோக்ஷம்  - மனத்துக்கினியான்!

"சீதே, ஸ்வரகோபி மம ந ரோசதே" - ஸீதயே! நீ இல்லாமல் ஸ்வர்கமும் ரசிக்காது  எனக்கு! - என்று சொன்ன ராமன் மனத்துக்கினியான்!

அவளை காணாமல் "சினத்தினால்" சீதையை தேட முயந்தவன் - மனதுக்கினியான்!

தென்னிலங்கை கோமானிடம் "இன்று போய் நாளை வா" என்று பரிந்து அருளினன் - மனத்துக்கினியான்!

"மமாபி எஷ: யதா தவ :" -  ராவணன் எனக்கும் சஹோதரன் தான் - என்று சொன்ன ராமன் - மனத்துக்கினியான்!

ராம ராம ராம!

அடியேன்

மாலதி பாலாஜி


No comments:

Post a Comment