LAKSHMI PATTABHISHEKAM - PANGUNI UTTRAM

 LAKSHMEE PATTABHISHEKAM

                                                       Smt. Malathi Balaji




It is our paramabhAgyam to remember Lakshmi avatAram, Lakshmi PaTTAbhishEkam and Lakshmi KalyANam on the auspicious day of Panguni uttram. The churning of the milky ocean (ksheera-sAgara manthanam), the birth of Lakshmi and Her marriage with VishNu were crucial to maintaining the cosmic order of the universe. Once upon a time, the dEvas were rendered weak by the curse of durvAsa maharshee. They approached VishNu for help. VishNu advised them to rope in asuras and churn the milky ocean along with them in order to obtain an immortal nectar called amRuta.  With vAsuki snake as the rope, mount mantAra as the churning rod, the asuras and devas started churning the milky ocean (ksheerasAgara).  Mount mantAra was slipping and hence VishNu flew on GaruDa and held the summit tight from above. He shone majestically with a thousand arms.  Now the base of the mountain was wavering. Vishnu again took on the shape of a huge tortoise (koorma avatAra) and held the mountain intact from under.  Lord VishNu also gave His power to the dEvas, asuras and snake vAsuki to churn the ocean. The nectar still did not appear.  So, Vishnu appeared in the form of Lord ajita having four hands and churned the ocean Himself. 

At first, a deadly poison called “hAlahala” emerged to destroy the universe. Lord Shiva recited achyutA, anantA, gOvindA, drank the poison, and retained it in his throat which became blue.  He was named neelakaNtha since then. Later, many divine beings like the celestial cow kAmadhEnu or surabhee, the Goddess of divine beverage vAruNee dEvi, wish-fulfilling kalpavRuksha tree, the ethereal apsaras, the moon God chandra, the divine horse uchchaishravas, the divine elephant airAvata, the precious gem kaustubha mani, and the divine doctor dhanvantari with the nectar pot emerged from the milky ocean.  Finally, the immensely radiant Lakshmi dEvi holding the lotus in her hands and seated on the thousand petalled lotus, emerged from the ocean.  The eight elephants bathed her with sacred waters (paTTAbhishEkham).  The rishis recited shreesooktams.  The gandharvas sang and the apsaras danced.  

         

SwAmi dEsikan beautifully captures the PaTTAbhishEkam of Lakshmi in his Shree Stuti 13 and 14

अग्रॆ भर्तु: सरसिजमयॆ भद्रपीठॆ निशण्णाम्
अम्भॊराशॆरधिगत सुधा सम्प्लवाद् उत्थितां त्वाम् |
पुष्पासार-स्थगित भुवनै: पुष्कलावर्तकाद्यै: 
क्लृप्तारम्भा: कनक कलशै:-अभ्यषिञ्चन् गजॆन्द्रा: ||

agrE bhartu: sarasijamayE bhadrapeeThE nishaNNAm
ambhOrAshEradhigata sudhA samplavAd utthitAM tvAm |
puShpAsAra-sthagita bhuvanai: puShkalAvartakAdyai: 
klRuptArambhA: kanaka kalashai: abhyaShinchan gajEndrA: ||

Oh dEvi! You arose from the flood of nectar on the milky ocean and sat opposite to Your Lord on the auspicious throne made of lotus flower.  The clouds showered so many flowers on You that the world almost disappeared. Then, the eight cardinal guardian elephants bathed you with waters from golden pots.  Thus, the coronation ceremony was started by the pushkalA and vartakA clouds and concluded by the ashTadik-gaja elephants.   



Then, Lakshmi arose carrying a garland in her hand and married VishNu by garlanding Him and taking a permanent seat on His chest (vakshasthalam).

आलॊक्यत्वां अमृतसहजॆ विष्णुवक्षस्थलस्थाम्
शापाक्रान्ता: शरणमगमन् सावरॊधास्सुरॆन्द्रा ।
लब्ध्वाभूयस्त्रिभुवनमिदं लक्षितं त्वत्कटाक्षै:
सर्वाकारस्थिरसमुदयां सम्पदं निर्विशन्ति ॥

AlOkyatvAM amRutasahajE viShNuvakShasthalasthAm
shApAkrAntA: sharaNamagaman sAvarOdhAssurEndraa |
labdhvAbhooyastribhuvanamidaM lakShitaM tvatkaTAkShai:
sarvAkaarasthirasamudayAM sampadaM nirvishanti ||

The dEvas who were sad due to durvAsa’s curse prostrated and surrendered to Lakshmi resting on the chest of Lord VishNu.  The moment Lakshmee’s glance fell on them, they regained the three worlds, all types of wealth, and prosperity.

Let us also always remember and surrender to shreedEvi who is “vishNuvaksha-sthalasthitA” and whose auspicious glance grants bhukti and mukti.

Nitya Shree Nitya Mangalam.


SIGNIFICANCE OF PANGUNI UTTRAM

Panguni uttaram tirunAL is a very important day as many divine events occurred on this auspicious day. The day occurs on the uttara nakshatra in the panguni month.  Let us find out what makes this day so special.
1.avatAram of mahAlakshmI: Lakshmi appeared on a thousand petalled lotus on the panguni uttiram day during the churning of the milky ocean by the devas and asuras.  Born from the lotus, she is called "PadmajA".  As she emerged from the ocean, she is referred by the name “samudra-tanayA”- or “Samudra-sambhavA” – daughter of the ocean.
2. VivAham of lakshmi and ViShnu: After emerging from the ocean, Lakshmi chose Lord Vishnu, the preserver of the universe, as her eternal consort. She garlanded VishNu on the same day and took her permanent seat on His chest.  Thus this day is their wedding day.
3. Tirunakshatram of RanganAyaki tAyar:  The goddess RanganAyaki of Shreerangam was consecrated on panguni uttaram day, hence we are also celebrating her birthday on this day.
4. Serthi of RanganAyaki and RanganAtha: On this day, the divine couple of shreerangam temple unite again after a small fight, according to tradition.  This event called “sErthi utsavam” is celebrated in a grand manner every year on panguni uttaram.  It is the only day when tAyAr and namperumAl grace us together on the same pedestal.
5. SharanAgati of rAmAnuja: On a panguni uttram tirunAL, swAmi rAmAnuja performed sharanAgati to seek the grace of the divine couple ranganAyaki and ranganAtha.
6. Release of Gadyatrayam: SwAmi rAmAnuja had composed Gadyatrayam, a collection of three gadyams namely sharaNAgati gadyam, vaikuNTha gadyam and shreeranga gadyam.  He submitted this wonderful work at the feet of the divine couple and recited the same in front of them.
7. ANDAL RangamannAr kalyANam:  The wedding of ANDAL and rangamannAr of shreerangam is conducted in a grand manner in sreevilliputtoor every year on panguni uttram day.
8. Nanjeeyar Acharyan’s tirunakshatram:  Swaami Nanjeeyar was born on Panguni Uttram.  He is the author of tiruvAymozhi 9000 paDi vyAkhyAnam.
9. Panguni uttram is the wedding day of Lord Shiva and Paarvati, Lord Muruga and Goddess DevayAnai, and the birthday of Lord Ayappa born from Mohini and Lord Shiva.




லக்ஷ்மி பட்டாபிஷேகம்

 லக்ஷ்மி பட்டாபிஷேகம்

திருமதி மாலதி பாலாஜி

 


பங்குனி உத்திரம் நன்னாளில் லட்சுமி லக்ஷ்மி அவதாரம், லக்ஷ்மி பட்டாபிஷேகம் மற்றும் லக்ஷ்மி கல்யாணம் இவைகளை ஸ்மரணம் செய்வது பெரும் பாக்யம் ஆகும்.

க்ஷீர சாகர மந்தனம், லக்ஷ்மியின் பிறப்பு மற்றும் விஷ்ணுவுடனான அவரது திருமணம் ஆகிய பகவத்லீலைகள் பிரபஞ்சத்தை சீராக்குவதற்காகவே உண்டானவை.   முன்பொரு காலத்தில், துர்வாச மஹர்ஷியின் சாபத்தால் தேவர்கள் பலவீனமடைந்தனர். உதவிக்காக விஷ்ணுவை அணுகினர்.  விஷ்ணு அவர்களுக்கு, அசுரர்களுடன் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தைப் பெறுமாறு அறிவுறுத்தினார்.  வாசுகி பாம்பைக் கயிறாகக் கொண்டு, மந்தார மலையை மத்தாக கொண்டு அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைய தொடங்கினர்.  மந்தார மலை நழுவிக்கொண்டிருந்ததால் விஷ்ணு கருடன் மீது பறந்து மேலே இருந்து சிகரத்தை இறுக்கமாகப் பிடித்தார்.  மீண்டும், ஒரு பெரிய ஆமையின் (கூர்ம அவதாரம்) வடிவத்தை எடுத்து, மலையை அப்படியே கீழிருந்தும் பிடித்தார்.  பகவான் விஷ்ணு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும், வாசுகி பாம்புக்கும் கடலைக் கலக்க தனது சக்தியைக் கொடுத்தார்.   ஆயிரக்கணக்கான கண்களையும் வாயையும் கொண்ட வாசுகி, கடுமையாக அழுத்தப்பட்டதால் நெருப்பையும் வெப்பத்தையும் உமிழ்ந்தார். பாம்பை குளிர்விக்க விஷ்ணு மேகங்களை மழையாகப் பொழியச் செய்தார். அப்போதும் அமிர்தம் தோன்றவில்லை. இறுதியாக, விஷ்ணு நான்கு கைகளைக் கொண்ட அஜித பகவான் வடிவத்தை எடுத்து, கடலை கடையத் தொடங்கினார்.

முதலில், பிரபஞ்சத்தை அழிக்க "ஹாலாஹலம்" என்ற கொடிய விஷம் தோன்றியது. சிவபெருமான் அச்யுதா, அனந்தா, கோவிந்தா என்ற பெயர்களை சொல்லி விஷத்தைக் பருகினார். மெலும் விஷம் பரவாமல் இருக்க அதை தொண்டையில் வைத்துக் கொண்டார்.  ஆகவே நீலகண்டன் என்ற பெயர் கிட்டியது.  

 பின்னர், பாற்கடலிலிருந்து பல தெய்வீகப் புருஷர்கள் எழுந்தனர். காமதேனு பசு, வாருணீ தேவி, கல்பவ்ருக்ஷ மரம், அப்சரஸ்கள், சந்திரன், உச்சைஷ்ரவஸ் குதிரை, மருத்துவர் தன்வந்தரி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டனர்.

இறுதியாக, தாமரையைத் தன் கைகளில் ஏந்தியபடி, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையின் மீது அமர்ந்திருந்த, பலமடங்கு பிரகாசமான லட்சுமி தேவி, கடலில் இருந்து வெளிப்பட்டாள்.   எட்டு திக்குக்கான யானைகள் தாயாரை புனித நீரால் குளிப்பாட்டினர்.  ரிஷிகள் ஸ்ரீசூக்தம் ஓதினார்கள்.  கந்தர்வர்கள் பாடினார்கள், அப்சரஸ்கள் நடனமாடினர்.  

ஸ்வாமி தேசிகன் தனது ஸ்ரீ ஸ்துதியில் லக்ஷ்மியின் பட்டாபிஷேகத்தை மிக அழகாகப் படம்பிடித்துள்ளார்:

அக்ரே பர்து: சரசிஜமயே பத்ரபீடே நிஷந்நாம் 
அம்போராசேரதிகத ஸுதா ஸம்ப்லவாத் உத்திதாம் த்வாம் |
புஷ்பாஸார-ஸ்தகித புவனை: புஷ்கலாவர்தகாத்யை: 
க்ல்ருப்தாரம்பா: கனக கலஷை: அப்யஷிந்சன் கஜேந்த்ரா: ||

ஓ தேவியே! பாற்கடலில் தேன் வெள்ளத்தில் இருந்து எழுந்தருளி, தாமரை மலரால் ஆன மங்களகரமான சிம்மாசனத்தில் உங்கள் மணாளனுக்கெதிரே அமர்ந்தாய்.  மேகங்கள் உங்கள் மீது பல மலர்களைப் பொழிந்தன, அந்த மழையில் உலகம் கிட்டத்தட்ட மறைந்தேவிட்டது. பின்னர், எட்டு யானைகளும் தங்கக்கலஸ்சத்திலிருந்து புனித நீரால் உன்னக்கு அபிசேகம் செய்தனர்.  நின் பட்டாபிஷேக விழா புஷ்கலா மற்றும் வர்தகா மேகங்களால் தொடங்கி, அஷ்டதிக்-கஜ யானைகளால் செவ்வனே நிறைவுற்றது.

பின்னர், வெட்கத்துடன் கூடிய லக்ஷ்மி விஷ்ணுவுக்கு மாலை அணிவித்து, அவரது மார்பில் நிரந்தரமாக அமர்ந்து அவரை மணந்தார். 



ஆலோக்யத்வாம் அம்ருதஸஹஜே விஷ்ணுவக்ஷ ஸ்தலஸ்தாம்
ஷாபாக்ராந்தா: சரணமகமந் ஸாவரோதாஸுரேந்த்ரா |
லப்த்வாபூயஸ்த்ரிபுவநமிதம் லக்ஷிதம் த்வத்கடாக்ஷை:
ஸர்வாகாரஸ்திரஸமுதயாம் ஸம்பதம் நிர்விஶந்தி ||

துர்வாசரின் சாபத்தால் சோகமடைந்த தேவர்கள், விஷ்ணுவின் மார்பில் இருந்த லட்சுமியைக் பணிந்து சரணடைந்தனர்.  தங்கள் கடாக்ஷம் அவர்கள் மீது விழுந்த கணம் செல்வம் மற்றும் செழிப்பு அனைத்தையும் மீண்டும் பெற்றனர். 

நாமும் எப்போதும் விஷ்ணுவக்ஷஸ்தலாவாகிய ஸ்ரீயை சரணடைவோம்.

நித்ய ஶ்ரீ நித்ய மங்களம்.











திருமங்கையாழ்வார் கண்ட திருக்கண்ணபுரம்

 

திருமங்கையாழ்வார் கண்ட திருக்கண்ணபுரம்



 பஞ்ச-க்ரிஷ்ணாரண்ய க்ஷேத்திரத்தில் ஒன்று தான் திருக்கண்ணபுரம் திவ்யதேசம்.

திருக்கண்ணபுரம் என்றாலே சவுரிகொண்டை தரித்திருக்கும் சவுரிராஜ பெருமாள் தான் ஞாபகம் வரும்.  மூலவர் நீளமேகப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன்,  ப்ரயோக சக்கரத்துடன் எழுந்தருளிருக்கிறார்.  கண்ணபுரநாயகி தனிக்கோயிலில் காட்சி அளிக்கிறாள்.  இக்கோயிலின் விமானம் உத்பலாவதக விமானம். சாதாரணமாக பிராகாரம் சுற்றி வந்தால் இந்த விமானத்தை காணமுடியாது.  மாடவீதியின் திருமங்கை ஆழ்வார் சந்நிதியிலேர்ந்து தான் காணமுடியும்.   திருக்கண்ணபுரத்தில் பெருமாள் ஆழ்வாருக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்ததாலே இவ்விமானம், அஷ்டாக்ஷர விமானம் என்றும் அழைக்கப்படுகிறது.  மாசி மகத்தின் தீர்த்தவாரி உத்ஸவமும் தெப்போத்ஸவமும் ஜகத்பிரசித்தம். ‘கமகம’  என்று நெய்மணம் வீசும் முனையதரையன் பொங்கல் இக்கோயிலின் தனிச்சிறப்பு.

திருமங்கை ஆழ்வார் திருக்கண்ணபுரம் திவ்யதேசத்தை 105 பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்திருக்கிறார் - பெரிய திருமொழி (100 பாசுரம்), திருநெடுந்தாண்டகம் (2 பாசுரம்), சிறிய திருமடல் (1 பாசுரம்), பெரிய திருமடல் (2 பாசுரம்).  பெரிய திருமொழி எட்டாம் பத்து,  மூன்றாம் திருமொழியிலும் ஏழாம் திருமொழியிலும்  ஆழ்வார் திருக்கண்ணபுரம் நகரத்தின் அழகையும், வளத்தையும், வாழ்க்கை முறையையும் அற்புதமாகவும் தெளிவாகவும் விவரித்திருக்கிறார். பெரும்பாலும் குற்றெழுத்தாலே அமைந்த ஏழாம் திருமொழியிலும் முதல் இரண்டு அடிகளில் பெருமாளின் சௌலப்ய-சௌசீல்ய குணங்களை பாடி பின்னர் இரண்டே அடிகளில் கண்ணபுரத்தின் அழகையும் செல்வத்தையும் பாடி இருக்கிறார்.

கலியன் கண்ட திருக்கண்ணபுரத்தை சித்திரமாக வரைந்து அனுபவிக்கலாம் என்ற ஒரு சிறு முயற்சியே இந்த வரைபடம்.  


கண்ணபுரத்தை பற்றி ஆழ்வார் சொன்ன முப்பது அடையாளங்கள் 30 எண்களால் குறிக்கப்பட்டுள்ளன.  அவை காண்போமா??

பெரிய திருமொழி 8.3*

(1) கரை எடுத்த சுரிசங்கும்
(2) கனபவளம்  
(3) எழு கொடியும் 
(4) திரை எடுத்து வருபுனல்சூழ்
(5) அரிவிரவு முகிற்கணத்தால்
(6) அகிற்புகையால் வரையோடும்
(7) தெரிவரிய மணிமாட
(8) துங்கமாமணிமாட நெடு முகட்டின் சூலிகைபோம்
(9) திங்கள் மாமுகில் துணிக்கும்
(10) கணமருவு மயிலகவு கடி பொழில் சூழ்
(11) திணமருவு கனமதில்சூழ்
(12) வாயெடுத்த மந்திரத்தால் அந்தணர்தம் செய் தொழில்கள்
(13) தீயெடுத்து மறைவளர்க்கும்
(14) மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர்பவளம்
(15) வண்டமரும் மலர்புன்னை -
(16) வரிநீழல் அணிமுத்தம் தெண்திரைகள் வரத்திரட்டும்
(17) கொங்குமலி கருங்குவளை, செங்கமல முகமலர்த்தும்

*பெரிய திருமொழி 8.7*

(18) நயமுடை நடையனம்
(19) இளையவர் நடை பயில்
(20) கயமிடை கணபுரம்
(21) கணபுரம்
(22) அடிகள் - பெருமாள்
(23) மண மலி விழவினொடு அடியவர் அளவிய
(24) முயல்துளர் மிளை முயல் துள
(25) வள விளை வயல் - கயல் துளு
(26) நல்விரை மலர் கோதிய மதுகரம் குலவிய மலர்மகள்
(27) திருமகள் கொழுவிய செழுமலர் முழுசிய பரவை பண்
(28) சுரிதியொடு அருமறை முறை சொலும் அடியவர்
(29) முடி புல்கு நெடு வயல் படை செல அடிமலர் கடி புல்கு
(30) வலமனு படை உடை மணிவணர் நிதிகுவை

அடியேன்

திருமதி மாலதி பாலாஜி

TIRUPPAVAI MAKOLAM IN A FRAME

 

TIRUPPAVAI IN A FRAME DRAWN USING WET RICE FLOUR.

By Smt. Malathi Balaji

1


2


3


4


5


6


7


8


9


10


11


12


13


14


15


16


17


18


19


20


21


22


23


24


25


26


27


28


29


30



FEATURED POST

PERIYAZHVAR TIRUMOZHI DECAD 1