Showing posts with label VAZHI TIRUNAMAM - TONDARADIPODI AZHVAR. Show all posts
Showing posts with label VAZHI TIRUNAMAM - TONDARADIPODI AZHVAR. Show all posts

TONDARADIPODI AZHVAR VAZHI TIRUNAMAM

 

TONDARADIPODI AZHVAR VAZHI TIRUNAMAM

TONDARADIPODI AZHVAR VAZHI – 1

மண்டங்க்குடி அதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியில் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரை சூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பதஞ்சும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவி தனை பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப் பதங்கள் வாழியே

 maNDangkuDi adanai vAzhvittAn vAzhiyE
 mArgazhiyil kETTaitanil vandudittAn vAzhiyE
 teNDirai chUzh arangaraiyE deyvam enRAn vAzhiyE
 tirumAlai onbadanjum cheppinAn vAzhiyE
 paNDu tiruppaLLiyezhuchchip patturaittAn vAzhiyE
 pAvaiyarkaL kalavi tanai pazhitta selvan vAzhiyE
 toNDu cheythu thuLabattAl tulanginAn vAzhiyE
 toNDaraDippoDiyAzhvAr tuNaip padangaL vAzhiyE

TONDARADIPODI AZHVAR VAZHI – 2
PRABANDHA SARAM

மன்னுமதிள் திருமண்டங்க்குடிதான் வாழ
மார்கழி மாத கேட்டை நாளில் வந்து
துன்னுபுகழ்த் தொண்டரடிப் பொடியே நீ முன்
துழாய்மாலை பணியடிமை செய்து நாளும்
தென்னரங்க மணவாளற் கன்பு மிக்குச்
செப்பிய நல் திருமாலை நாற்பத்தைந்தும்
பன்னியநல் திருப்பள்ளியெழுச்சி பத்தும்
பழவடியேனுக்கருள் செய் பரிந்து நீயே

mannumadiL tirumaNDangkuDitAn vAzha
mArgazhi mAda kETTai nALil vandu
tunnupugazht toNDaraDip poDiyE nee mun
tuzhAymAlai paNiyaDimai cheydu nALum
tennaranga maNavALaR kanbu mikkuch
cheppiya nal tirumAlai nARpattaindum
panniyanal tiruppaLLiyezhuchchi pattum
pazhavaDiyEnukkaruL sey parindu neeyE

FEATURED POST

PERIYAZHVAR TIRUMOZHI DECAD 1