KULASEKARA AZHVAR VAZHI TIRUNAMAM
அஞ்சன மாமலைப் பிறவி ஆதரித்தோன் வாழியே
அணி அரங்கர் மணத் தூணை அடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்ஜி நகரம் தன்னில் வாழ வந்தோன் வாழியே
மாசி தனில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப் பாம்பில் அங்கை இட்டான் வாழியே
அனவரதம் இராம கதை அருளுமுவன் வாழியே
செஞ்சொல் மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே
சேரலர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே
anjana mAmalaip piRavi AdharittOn vAzhiyE
aNi arangar maNat tUNai aDainduyndOn vAzhiyE
vanji nagaram thannil vAzha vandOn vAzhiyE
mAsi tanil punarpUcham vandudhittAn vAzhiyE
anjalenak kuDap pAmbil angai iTTAn vAzhiyE
anavaratam irAma kadhai aruLumuvan vAzhiyE
chenchol mozhi nURRanjum cheppinAn vAzhiyE
chEralar kOn sengkamalat tiruvaDigaL vAzhiyE
KULASEKARA PERUMAL VAZHI TIRUNAMAM – 2
By Sri nikamAnta mahAdesikan (prabandha sAram)
பொன் புரையும் வேல் குலஸேகரனே மாஸிப்
புனர்பூசத்து எழில் வஞ்சிக் களத்தில் தோன்றி
அன்புடனே நம் பெருமாள் செம்பொற்கோயில்
அனைத்து உலகின் பெருவாழ்வும், அடியார் தங்கள்
இன்பமிகு பெருன்குழுவும் காண மண்மேல்
இருளிரிய என்றெடுத்த இசையில் சொன்ன
நன்பொருள்சேர் திருமொழி நூற்றைந்து பாட்டும்
நன்றாக எனக்கு அருள் செய் நல்கி நீயே.
pon puraiyum vEl kulasEkaranE mAsip
punarpoochattu ezhil vanjchik kaLattil thOnRi
anbuDanE nam perumAL chempoRkOyil
anaittu ulagin peruvAzhvum, aDiyaar tangaL
inbamigu perunkuzhuvum kaaNa maNmEl
iruLiriya enReDutta ichaiyil chonna
nanporuLchEr thirumozhi nooRRaindu paaTTum
nanRaaga enakku aruL chey nalgi neeyE
Meaning: kulasEkaran wielding a sharp shining spear was born in TiruvanjikkaLam in Maasi punarvasu. He sang with love and great devotion on namperumAL of Srirangam (read below) in the very first ten, and then on His devotees. He longed to be in the association of the bhagavatas visiting Srirangam and wished to enjoy the Lord's tirumEni in their company. Swami Desikan prays to AzhwAr to enlighten him with the wonderful 105 verses of PerumAL Thirumozhi with its nuances and inner meanings.
KULASEKARA PERUMAL VAZHI TIRUNAMAM – 3
Swami Manavala Maamunigal,Upadesha RatnamAlai 13.
மாசிப் புனர்ப்பூசம் காண்மின் இன்று மண்ணுலகீர்
தேசித் திவஸத்துக்கேதென்னில் பேசுகின்றேன்
கொல்லிநகர்க் கோன் குலஸேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள்.
Maasip PunarppUsam KaaNmin inRu MaNNulageer
tEsit tivasattukkEtennil –pEsuginREn
Kollinagark kOn KulasEkaran piRappAl
nallavarkaL koNDADum naaL.
(Meaning): Oh BhumaNDala Vaasis! Is it not today Maasi PunarppUsam ? Let me point out the glory of this day. This is the unique day, when righteous people celebrate the birthday of KulasEkara AazhwAr, the chieftain of KoLLi NaaDu.
KULASEKARA PERUMAL VAZHI TIRUNAMAM – 4
கும்பே புனர்வஸௌ ஜாதம் கேரளே சோளபட்டணே |
கௌஸ்துபாம்சம் தராதீசம் குலசெகரமாஶ்ரயே||
kumbhE punarvasau jAtam kEraLE chOLapaTTaNE |
kaustubhAmSam dharAdhISam kulaSekharamASrayE||
I salute the great kulaSekarA, who gloriously ruled the CherA kingdom , who
is the amSa of the Kaustabha jewel which decorates the beautiful chest of
Sriman nArAyaNA, who was born in the land of kEraLa, in the capital city named kollinagar (vanjikkaLam), during the month of mAsi on the day of the punarvasu star.
KULASEKARA PERUMAL VAZHI TIRUNAMAM – 5
குஶ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா தினே தினே |
தம் அஹம் ஶிரஸா வன்தே ராஜானம் குலஶெகரம் ||
ghushyatE yasya nagarE rangayAtrA dinE dinE |
tam aham SirasA vandE rAjAnam kulaSekharam ||
I bow my head down to that kulaSekharA king, inside whose capital city the words “ranga yAtrA” are being uttered every day. (where devotees flock to srirangam on a pilgrimage).
KULASEKARA AZHVAR TIRUVADIGALE SHARANAM.
No comments:
Post a Comment