TIRUPPANAZHVAR VAZHI - 1
உம்பர் தொழும் மெய்ஞானத்து உறையூரான் வாழியே
ரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்த்தார் முனி தோளில் வந்த பிரான் வாழியே
மலர்க்கண்ணை வேறொன்றில் வையாதான் வாழியே
அம்புவியில் மதிள் அரங்கர் அகம் புகுந்தான் வாழியே
அமலனாதி பிரான் பத்தும் அருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகத்தலத்தில் வாழியே
umbar tozhum meygyAnattu uRaiyUrAn vAzhiyE
urOgiNi nAL kArttigaiyil uditta vaLLal vAzhiyE
vambavizhttAr muni tOLil vanda pirAn vAzhiyE
malarkkaNNai vERonRil vaiyAdAn vAzhiyE
ampuviyil madiL arangar agam pugundAn vAzhiyE
amalanAdi pirAn pattum aruLinAn vAzhiyE
chempon aDi muDi aLavum chEvippOn vAzhiyE
tiruppANan poRpadangaL chegattalattil vAzhiyE
TIRUPPANAZHVAR VAZHI - 2
PRABANDHA SARAM BY SWAMY DESIKAN
உலகறிய மலிபுகழ் கார்த்திகை மாதத்தில்
உரோகிணிநாள் உறந்தைவளம் பதியில் தோன்றி
தலமளந்த தென்னரங்கர் பால் உலோக
சாரங்க மாமுனி தோள்தனிலே வந்து
பலமறையின் பொருளால் பாண் பெருமாளே நீ
பாதாதி கேசமதாய்ப் பாடித் தந்த
சொல் அமலனாதிபிரான் பத்து பாட்டும்
சோராமல் எனக்கருள்செய் துலங்க நீயே
ulagaRiya malipugazh kArttigai mAdattil
urOgiNinAL uRandaivaLam patiyil tOnRi
talamaLanda tennarangar pAl ulOga
chAranga mAmuni tOLtanilE vandu
palamaRaiyin poruLAl pAN perumALE nee
pAdAdi kEshamadAyp pADit tanda
chol amalanAdipirAn pattu pATTum
chOrAmal enakkaruLchey tulanga neeyE
No comments:
Post a Comment