திருமங்கையாழ்வார் கண்ட திருக்கண்ணபுரம்

 

திருமங்கையாழ்வார் கண்ட திருக்கண்ணபுரம்



 பஞ்ச-க்ரிஷ்ணாரண்ய க்ஷேத்திரத்தில் ஒன்று தான் திருக்கண்ணபுரம் திவ்யதேசம்.

திருக்கண்ணபுரம் என்றாலே சவுரிகொண்டை தரித்திருக்கும் சவுரிராஜ பெருமாள் தான் ஞாபகம் வரும்.  மூலவர் நீளமேகப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன்,  ப்ரயோக சக்கரத்துடன் எழுந்தருளிருக்கிறார்.  கண்ணபுரநாயகி தனிக்கோயிலில் காட்சி அளிக்கிறாள்.  இக்கோயிலின் விமானம் உத்பலாவதக விமானம். சாதாரணமாக பிராகாரம் சுற்றி வந்தால் இந்த விமானத்தை காணமுடியாது.  மாடவீதியின் திருமங்கை ஆழ்வார் சந்நிதியிலேர்ந்து தான் காணமுடியும்.   திருக்கண்ணபுரத்தில் பெருமாள் ஆழ்வாருக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்ததாலே இவ்விமானம், அஷ்டாக்ஷர விமானம் என்றும் அழைக்கப்படுகிறது.  மாசி மகத்தின் தீர்த்தவாரி உத்ஸவமும் தெப்போத்ஸவமும் ஜகத்பிரசித்தம். ‘கமகம’  என்று நெய்மணம் வீசும் முனையதரையன் பொங்கல் இக்கோயிலின் தனிச்சிறப்பு.

திருமங்கை ஆழ்வார் திருக்கண்ணபுரம் திவ்யதேசத்தை 105 பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்திருக்கிறார் - பெரிய திருமொழி (100 பாசுரம்), திருநெடுந்தாண்டகம் (2 பாசுரம்), சிறிய திருமடல் (1 பாசுரம்), பெரிய திருமடல் (2 பாசுரம்).  பெரிய திருமொழி எட்டாம் பத்து,  மூன்றாம் திருமொழியிலும் ஏழாம் திருமொழியிலும்  ஆழ்வார் திருக்கண்ணபுரம் நகரத்தின் அழகையும், வளத்தையும், வாழ்க்கை முறையையும் அற்புதமாகவும் தெளிவாகவும் விவரித்திருக்கிறார். பெரும்பாலும் குற்றெழுத்தாலே அமைந்த ஏழாம் திருமொழியிலும் முதல் இரண்டு அடிகளில் பெருமாளின் சௌலப்ய-சௌசீல்ய குணங்களை பாடி பின்னர் இரண்டே அடிகளில் கண்ணபுரத்தின் அழகையும் செல்வத்தையும் பாடி இருக்கிறார்.

கலியன் கண்ட திருக்கண்ணபுரத்தை சித்திரமாக வரைந்து அனுபவிக்கலாம் என்ற ஒரு சிறு முயற்சியே இந்த வரைபடம்.  


கண்ணபுரத்தை பற்றி ஆழ்வார் சொன்ன முப்பது அடையாளங்கள் 30 எண்களால் குறிக்கப்பட்டுள்ளன.  அவை காண்போமா??

பெரிய திருமொழி 8.3*

(1) கரை எடுத்த சுரிசங்கும்
(2) கனபவளம்  
(3) எழு கொடியும் 
(4) திரை எடுத்து வருபுனல்சூழ்
(5) அரிவிரவு முகிற்கணத்தால்
(6) அகிற்புகையால் வரையோடும்
(7) தெரிவரிய மணிமாட
(8) துங்கமாமணிமாட நெடு முகட்டின் சூலிகைபோம்
(9) திங்கள் மாமுகில் துணிக்கும்
(10) கணமருவு மயிலகவு கடி பொழில் சூழ்
(11) திணமருவு கனமதில்சூழ்
(12) வாயெடுத்த மந்திரத்தால் அந்தணர்தம் செய் தொழில்கள்
(13) தீயெடுத்து மறைவளர்க்கும்
(14) மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர்பவளம்
(15) வண்டமரும் மலர்புன்னை -
(16) வரிநீழல் அணிமுத்தம் தெண்திரைகள் வரத்திரட்டும்
(17) கொங்குமலி கருங்குவளை, செங்கமல முகமலர்த்தும்

*பெரிய திருமொழி 8.7*

(18) நயமுடை நடையனம்
(19) இளையவர் நடை பயில்
(20) கயமிடை கணபுரம்
(21) கணபுரம்
(22) அடிகள் - பெருமாள்
(23) மண மலி விழவினொடு அடியவர் அளவிய
(24) முயல்துளர் மிளை முயல் துள
(25) வள விளை வயல் - கயல் துளு
(26) நல்விரை மலர் கோதிய மதுகரம் குலவிய மலர்மகள்
(27) திருமகள் கொழுவிய செழுமலர் முழுசிய பரவை பண்
(28) சுரிதியொடு அருமறை முறை சொலும் அடியவர்
(29) முடி புல்கு நெடு வயல் படை செல அடிமலர் கடி புல்கு
(30) வலமனு படை உடை மணிவணர் நிதிகுவை

அடியேன்

திருமதி மாலதி பாலாஜி

1 comment:

  1. .s r . JagannathanJuly 9, 2025 at 6:22 PM

    Very useful site
    I wish to know abt - divyadedam pasurams in recital mode info
    While many books/ info is there - I wish to know about recital ode videos pls

    ReplyDelete

FEATURED POST

THREE CHARAMA SHLOKAS