லக்ஷ்மி பட்டாபிஷேகம்
திருமதி மாலதி பாலாஜி
பங்குனி உத்திரம் நன்னாளில் லட்சுமி லக்ஷ்மி அவதாரம், லக்ஷ்மி பட்டாபிஷேகம் மற்றும் லக்ஷ்மி கல்யாணம் இவைகளை ஸ்மரணம் செய்வது பெரும் பாக்யம் ஆகும்.
க்ஷீர சாகர மந்தனம், லக்ஷ்மியின் பிறப்பு மற்றும் விஷ்ணுவுடனான அவரது திருமணம் ஆகிய பகவத்லீலைகள் பிரபஞ்சத்தை சீராக்குவதற்காகவே உண்டானவை. முன்பொரு காலத்தில், துர்வாச மஹர்ஷியின் சாபத்தால் தேவர்கள் பலவீனமடைந்தனர். உதவிக்காக விஷ்ணுவை அணுகினர். விஷ்ணு அவர்களுக்கு, அசுரர்களுடன் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தைப் பெறுமாறு அறிவுறுத்தினார். வாசுகி பாம்பைக் கயிறாகக் கொண்டு, மந்தார மலையை மத்தாக கொண்டு அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைய தொடங்கினர். மந்தார மலை நழுவிக்கொண்டிருந்ததால் விஷ்ணு கருடன் மீது பறந்து மேலே இருந்து சிகரத்தை இறுக்கமாகப் பிடித்தார். மீண்டும், ஒரு பெரிய ஆமையின் (கூர்ம அவதாரம்) வடிவத்தை எடுத்து, மலையை அப்படியே கீழிருந்தும் பிடித்தார். பகவான் விஷ்ணு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும், வாசுகி பாம்புக்கும் கடலைக் கலக்க தனது சக்தியைக் கொடுத்தார். ஆயிரக்கணக்கான கண்களையும் வாயையும் கொண்ட வாசுகி, கடுமையாக அழுத்தப்பட்டதால் நெருப்பையும் வெப்பத்தையும் உமிழ்ந்தார். பாம்பை குளிர்விக்க விஷ்ணு மேகங்களை மழையாகப் பொழியச் செய்தார். அப்போதும் அமிர்தம் தோன்றவில்லை. இறுதியாக, விஷ்ணு நான்கு கைகளைக் கொண்ட அஜித பகவான் வடிவத்தை எடுத்து, கடலை கடையத் தொடங்கினார்.
முதலில், பிரபஞ்சத்தை அழிக்க "ஹாலாஹலம்" என்ற கொடிய விஷம் தோன்றியது. சிவபெருமான் அச்யுதா, அனந்தா, கோவிந்தா என்ற பெயர்களை சொல்லி விஷத்தைக் பருகினார். மெலும் விஷம் பரவாமல் இருக்க அதை தொண்டையில் வைத்துக் கொண்டார். ஆகவே நீலகண்டன் என்ற பெயர் கிட்டியது.
பின்னர், பாற்கடலிலிருந்து பல தெய்வீகப் புருஷர்கள் எழுந்தனர். காமதேனு பசு, வாருணீ தேவி, கல்பவ்ருக்ஷ மரம், அப்சரஸ்கள், சந்திரன், உச்சைஷ்ரவஸ் குதிரை, மருத்துவர் தன்வந்தரி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டனர்.
இறுதியாக, தாமரையைத் தன் கைகளில் ஏந்தியபடி, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையின் மீது அமர்ந்திருந்த, பலமடங்கு பிரகாசமான லட்சுமி தேவி, கடலில் இருந்து வெளிப்பட்டாள். எட்டு திக்குக்கான யானைகள் தாயாரை புனித நீரால் குளிப்பாட்டினர். ரிஷிகள் ஸ்ரீசூக்தம் ஓதினார்கள். கந்தர்வர்கள் பாடினார்கள், அப்சரஸ்கள் நடனமாடினர்.
ஸ்வாமி தேசிகன் தனது ஸ்ரீ ஸ்துதியில் லக்ஷ்மியின் பட்டாபிஷேகத்தை மிக அழகாகப் படம்பிடித்துள்ளார்:
அம்போராசேரதிகத ஸுதா ஸம்ப்லவாத் உத்திதாம் த்வாம் |
புஷ்பாஸார-ஸ்தகித புவனை: புஷ்கலாவர்தகாத்யை:
க்ல்ருப்தாரம்பா: கனக கலஷை: அப்யஷிந்சன் கஜேந்த்ரா: ||
ஓ தேவியே! பாற்கடலில் தேன் வெள்ளத்தில் இருந்து எழுந்தருளி, தாமரை மலரால் ஆன மங்களகரமான சிம்மாசனத்தில் உங்கள் மணாளனுக்கெதிரே அமர்ந்தாய். மேகங்கள் உங்கள் மீது பல மலர்களைப் பொழிந்தன, அந்த மழையில் உலகம் கிட்டத்தட்ட மறைந்தேவிட்டது. பின்னர், எட்டு யானைகளும் தங்கக்கலஸ்சத்திலிருந்து புனித நீரால் உன்னக்கு அபிசேகம் செய்தனர். நின் பட்டாபிஷேக விழா புஷ்கலா மற்றும் வர்தகா மேகங்களால் தொடங்கி, அஷ்டதிக்-கஜ யானைகளால் செவ்வனே நிறைவுற்றது.
பின்னர், வெட்கத்துடன் கூடிய லக்ஷ்மி விஷ்ணுவுக்கு மாலை அணிவித்து, அவரது மார்பில் நிரந்தரமாக அமர்ந்து அவரை மணந்தார்.
ஷாபாக்ராந்தா: சரணமகமந் ஸாவரோதாஸுரேந்த்ரா |
லப்த்வாபூயஸ்த்ரிபுவநமிதம் லக்ஷிதம் த்வத்கடாக்ஷை:
ஸர்வாகாரஸ்திரஸமுதயாம் ஸம்பதம் நிர்விஶந்தி ||
துர்வாசரின் சாபத்தால் சோகமடைந்த தேவர்கள், விஷ்ணுவின் மார்பில் இருந்த லட்சுமியைக் பணிந்து சரணடைந்தனர். தங்கள் கடாக்ஷம் அவர்கள் மீது விழுந்த கணம் செல்வம் மற்றும் செழிப்பு அனைத்தையும் மீண்டும் பெற்றனர்.
நாமும் எப்போதும் விஷ்ணுவக்ஷஸ்தலாவாகிய ஸ்ரீயை சரணடைவோம்.
நித்ய ஶ்ரீ நித்ய மங்களம்.
No comments:
Post a Comment